இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

எலான் மஸ்க்கின் செயற்கைக் கோள் இணைய சேவைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை அனுமதியளித்துள்ளது.

எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்டார் லிங்க்’ என்பது செயற்கைக் கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.

இது, சுமார் 125 நாடுகளில் செயற்கைக் கோள்களின் மூலம் அதிவேக, குறைந்த தாமத பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சாட்டலைட் (ஜிஎம்பிஎஸ்சி) அதாவது, செயற்க்கைக் கோள் மூலம் உலகளாவிய மொபைல் தனிநபர் தொடர்பு எனும் அனுமதியை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்டார்லிங்க் நிறுவனம், அதன் நோக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு இணக்கத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளதால், விரைவில் அதற்கான சோதனைகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், இந்தியாவில் இணைய சேவைகளை வழங்க ஒன்வெப் மற்றும் ஜியோவின் எஸ்.இ.எஸ் ஆகிய நிறுவனங்களுக்கு, பின் மூன்றாவதாக ஸ்டார் லிங்க் நிறுவனத்துக்கு ஜிஎம்பிசிஎஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதன் சேவைகளை முழுவதுமாகத் துவங்க, ஸ்டார் லிங்க் நிறுவனம் தற்போது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் ஒப்புதல்களைப் பெற வேண்டும்.

ஆனால், செயற்க்கைகோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்க ஸ்டார் லிங்க் நிறுவனத்துக்கு தனியாக ஸ்பெக்ட்ரம் (நிறமாலை) ஒதுக்கப்படுவதற்கு முன்பே அந்த அனுமதிகளுக்குத் தேவையான ஆவணங்களை, அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான, புதிய தேசிய பாதுகாப்பு வழிமுறைகளுக்கு இணங்க, ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்ட பின்னரே மத்திய தொலைத் தொடர்புத் துறை அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய வர்த்தகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டம் குறித்து ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மேலும், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூரில் செய்ற்கைக் கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இத்துடன். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட எலான் மஸ்க் அவரது பதவியை விட்டு விலகினார். மேலும், இருவரும் பொதுவெளியில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்

எலான் மஸ்க்
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்! விஜய் என்ன எம்ஜிஆரா? பாஜக வளர்கிறது! - திருநாவுக்கரசர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com