
கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார்.
கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
அதற்கு முன்னதாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செனாப் மற்றும் அன்ஜி ரயில் பாலங்கள் வழியாக புதிய ரயில் வழித்தடத்தில் இந்த ரயில் பயணித்தை தொடங்கியது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து அடிக்கல் நாட்டினார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.