
பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி துணிவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள ஒவ்வோர் அரசியல் தலைவரும் சுதந்திரமாக பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொள்கின்றனர். ஆனால், எங்களுக்கு 11 ஆண்டுகளாக ஒன்றுகூட இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு தேர்தல் பிரசாரத்தில், எழுதி இயக்கப்பட்ட ஓர் ஊடக உரையாடலைத்தான் மேற்கொண்டார். அதன்போது, அவர் உயிரியல் அல்லாதவர் என்றுகூறி, பிரபலமாகவும் முயற்சித்தார்.
இருப்பினும், அவர் ஒருபோதும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த துணியவில்லை. இது அவரது முன்னோடிகள் அனைவரிடத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்பட, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுதான் வழி என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.