Chhattisgarh IED blast
கோப்புப்படம்

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்தது பற்றி...
Published on

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் கோண்டா பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் உயிரிழந்தனர்.

ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் தலைமையில் காவலர்கள், பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குண்டு வெடித்ததில் ஆகாஷ் ராவ் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இந்த குண்டுவெடிப்பில் அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோண்டா நகர காவல் ஆய்வாளர் உள்பட மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, வீரமரணம் அடைந்த ஏஎஸ்பி-க்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் பதுங்கியிருக்கும் நக்சல்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் கூடுதலாக அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல்கள் மிகவும் ஆழமாக பதுக்கிவைத்திருக்கும் இதுபோன்ற வெடிகுண்டுகள் பல ஆண்டுகளாக மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த வெடிகுண்டுகள் மிகவும் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும்போது கருவிகளால் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com