
புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள் , 24 சிறுவர்கள், 15 சிறுமிகள் அடங்குவர். மங்கல்பூரியில் ரயில்வே பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையால் நிகழாண்டில் மட்டும் 242 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இன்று(ஜூன் 10) தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.