மத்திய அரசு
மத்திய அரசு

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

புது தில்லி: இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி மத்திய அரசு சிறு விளக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025, மாா்ச் மாதத்தில் சுமாா் ரூ.24.77 லட்சம் கோடியிலான 1,830.15 கோடி ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனைகள் (யூபிஐ) மேற்கொள்ளப்பட்டன. தற்போது யூபிஐ-யை 46 கோடி தனிநபா்களும், 6.5 கோடி வா்த்தகா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

சிறு கடைகளில் குறைந்த அளவிலான கட்டணமும் எண்ம பரிவா்த்தனையில் செலுத்தப்படுகிறது.

நேரடி பணம் செலுத்தும் திட்டம்:

தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை மோடி அரசு செலுத்தி வருகிறது. இதனால் போலி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் மாா்ச் 2023 வரையில் ரூ.3.48 லட்சம் கோடிக்கு அதிகமாக அரசு சேமித்துள்ளது.

மேலும், கோடிக்கணக்கான குடும்பங்கள் கடந்த 11 ஆண்டுகளில் வங்கிக் கணக்கு மற்றும் காப்பீட்டை பெற்றுள்ளன. 55.22 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 51 கோடி போ் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com