சிக்கிம் நிலச்சரிவு: 10வது நாளில் 2 பேரது உடல்கள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் பலியான இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்...
மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்...ANI
Published on
Updated on
1 min read

சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் உள்பட பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இதனைத் தொடர்ந்து, அந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட ராணுவ முகாமிலிருந்த 3 வீரர்கள் பலியான நிலையில் 6 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 10) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், நேற்று (ஜூன் 9) மீட்புப் படையினர் ராணுவ வீரரான பி.கே. சையினுதீன் என்பவரது உடலை மீட்டனர்.

இதன்மூலம், மாயமான 6 பேரில், மூவரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 2,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், இந்திய விமானப் படை, ராணுவப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com