ஜெகந்நாதர் நீராட்டு விழா
ஜெகந்நாதர் நீராட்டு விழா

புரி ஜெகந்நாதர் நீராட்டு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

வேத மந்திரங்களுடன் சிலைகளுக்கு நீராட்டு விழா விமரிசையாக நடைபெற்து.
Published on

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் நீராட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பத்து நாள்கள் நடைபெறவிருக்கும் தேர்த் தேர்விழா ஜூன் 27ல் தொடங்குகிறது. மூன்று தேர்கள் புரியின் வீதிகளில் உலா வர இருக்கின்றன. ரத யார்த்திரைக்கான ஏற்பாடுகள் ஒடிசாவில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், புரி ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கு முன்னதாக நடைபெறும் நீராட்டு திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

தேவ ஸ்நான பூர்ணிமா என்று அழைக்கப்படும் இந்த விழா ஆவணி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று தெய்வங்களின் மரச் சிலைகள் கருவறையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு நீராடும் சடங்குகளுக்காக வைக்கப்படுகிறது.

அந்தவகையில், இன்று நடைபெறும் நீராட்டு விழாவில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரை ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளும் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு வளாகத்தில் உள்ள நீராட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த நாளை ஜெகந்நாதரின் பிறந்தநாளாகவும் கருதப்படுகிறது.

வேத மந்திரங்கள் ஓதப்படும் வேளையில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கிணறிலிருந்து 108 குடம் புனித நீர் எடுத்து மூன்று சிலைகள் மீதும் ஊற்றப்பட்டது.

மேலும் சிலைகளைச் சடங்கு ரீதியாக துடைத்து, யானையின் உடை என்றழைக்கப்படும் உடையைக் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நீராட்டு நிகழ்ச்சியைக் காண ஒவ்வொரு வருடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது வழக்கமாகும். இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com