
பிரதமர் மோடியின் முழு அரசியலும் தோல்வி, சிதைவு மற்றும் பிரிவினையால் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 11 ஆண்டுகளில், பாஜக தலைவர்கள் நிறைய பேசினார்கள், ஆவேசமான உறைகளை எழுப்பினார்கள். ஆனால் அவர்களின் ஒவ்வொரு திட்டமும் முற்றிலும் தோல்வியடைந்து புகைந்து போய்விட்டது. மோடியின் முழு அரசியலும் தோல்வியை சந்தித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் பாதுகாப்பின்மையை உணர்ந்து வருவதாகவும், பிரதமர் மோடியின் உரைகள் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. 11 ஆண்டுகளின் வரலாற்றைப் பாருங்கள், ஆளும் பாஜக சிதைவு மற்றும் பிரிவினை அரசியலைச் செய்துள்ளது,
மத்திய அரசு பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்ததாக குற்றம் சாட்டினார். பெண்கள், பழங்குடியினர் மற்றும் ராணுவ அதிகாரிகளை அவமதிக்கும் தனது கட்சியினர் மீது பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்களை அவமதிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சி குறித்து கடுமையாக சாடினார். இவ்வளவு பொய்களைச் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததேயில்லை. இளைஞர்களை ஏமாற்றி, ஏழைகளை கவர்ந்திழுத்து வாக்குகளைப் பெறுகிறார் பிரதமர் என்று கலபுர்கியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.