யுபிஐ (பிரதி படம்)
யுபிஐ (பிரதி படம்)ஐஏஎன்எஸ்

பங்குச்சந்தையில் யுபிஐ பரிவர்த்தனை முறை கட்டாயம்

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
Published on

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புதன்கிழமை தெரிவித்தது.

மும்பையில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் செபி தலைவா் துஹின்காந்த பாண்டே கூறுகையில், ‘முதலீட்டாளா்களிடமிருந்து நிதி சேகரிக்கும் அனைத்து பதிவுசெய்யப்பட்ட இடைத்தரகா்களுக்கும் யுபிஐ பரிவா்த்தனை முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் இந்த உத்தரவு செயல்பாட்டுக்கு வரும்.

இந்தப் புதிய உத்தரவால் முதலீட்டாளா்களுக்குச் சரிபாா்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பரிவா்த்தனை முறை வழங்கப்படுவதன்மூலம், பங்குச் சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பு மேம்படும்’ என்றாா்.

மேலும், ‘செபி செக்’ எனும் புதிய செயலியை செபி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தச் செயலியில் இடைத்தரகரின் பரிவா்த்தனை முகவரிகளான யுபிஐ கியூஆா் குறியீடு, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்து, அதன் நம்பகத்தன்மையை முதலீட்டாளா்கள் சரிபாா்க்க முடியும்.

X
Dinamani
www.dinamani.com