
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
அனகாபள்ளி மாவட்டத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ நகரத்திலுள்ள, மருந்து ஆலையில் இன்று (ஜூன் 12) அதிகாலை 1 மணியளவில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளிகள் தற்போது பலியாகியுள்ளனர். மேலும், ஒருவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், விசாரணை மேற்கொள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அந்த ஆலையின் அதிகாரிகளின் அறிக்கைக்காக, காவல் துறையினர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.