
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்திலிருந்து மதியம் 1.39 மணிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த கேப்டன் சுமீத் சபர்வால் என்றும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்திலிருந்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 1.39 மணிக்கு ஆபத்து குறித்த அழைப்பு வந்த சிலி வினாடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஏர் இந்தியா விமான விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?
விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆமதாபாத் விமான நிலையம் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் கரும்புகை சூழந்துள்ளது. விமானம் விழுந்த வேகத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதியை தீப்பற்றி எரிந்தது.
சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்து வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளிக்கிறது.
விபத்துக்குள்ளான இடத்திலிருந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது. விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.