ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

காண்ட்வா நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையில் 100 வீடுகள் இடிக்கப்பட்டன.
ம.பி.யில் வீடுகள் இடிக்கப்பட்ட இடம்
ம.பி.யில் வீடுகள் இடிக்கப்பட்ட இடம்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன.

காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்கள் காலி செய்யாத நிலையில் நகராட்சி ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக காண்ட்வா நகராட்சி ஆணையர் பிரியங்கா ரஜாவத் கூறுகையில்,

ஷக்கர் குளம் பகுதி அருகே ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறோம். கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தைக் காலி செய்யுமாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். சுமார் 100 சட்டவிரோத வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. 25 வீட்டு உரிமையாளர்கள் நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், அவைகள் இடிக்கப்படவில்லை.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை நகரின் பேகம் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்ற இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மகாகாலேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம், மொத்தம் ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் சோனி கூறுகையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குத்தகை விதிமுறைகளை மீறியதற்காக சாலைகளின் இருபுறமும் கட்டப்பட்ட கட்டமைப்புகளின் குத்தகையை யுடிஏ ரத்து செய்தது. அதன்பிறகு இங்கு ஏழு கட்டமைப்புகள் கட்டப்பட்ட நான்கு வீடுகள், இன்னும் சில வணிக நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, அவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குத்தகை ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த கட்டமைப்புகள் அனைத்தும் அரசு சொத்தாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையின் கீழ், பெகு பாக் பகுதியில் நான்கு இடங்களில் உள்ள ஏழு கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கவனிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து நடவடிக்கைகளும் அமைதியாக நடைபெற்று வருவதாக ஏஎஸ்பி பார்கவா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com