விமான விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

குஜராத் விமான விபத்தையடுத்து மத்திய அரசின் உதவி எண்கள் அறிவிப்பு..
விமான விபத்து
விமான விபத்து
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மத்திய அரசின் உதவி எண்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. ஆமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதையடுத்து, 1800 222 271, 1800 5691 444 என்ற மத்திய அரசின் உதவி எண்களில் அழைக்கலாம் என ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

011 - 2461 0843, 96503 91859 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என விமான போக்குவரத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com