விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த விமானி!

அனுபவம் வாய்ந்த விமானி இயக்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட ஏர் இந்தியா விமானம்
விபத்து ஏற்பட்ட ஏர் இந்தியா விமானம்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்த விமானி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. ஆமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

விமானத்தை இயக்கிய விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்றும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணித்தவர்களின் 7 குழந்தைகள் என்றும், அதில் 2 கைக்குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக 50 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com