
குஜராத்தின் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட பதிவில்,
குஜராத்தின் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்த பற்றி அறிந்ததும் மிகுந்த வருத்தடைந்தேன். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்த உறுதியான தகவல்கள் கிடைத்தும் பகிரப்படும் என்று அவர் கூறினார்.
நடந்தது என்ன?
குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. ஆமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
முதற்கட்டமாக விமான விபத்தில் 133 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.