பிரதமருடன் பிரிட்டன்
துணைத் தூதா் ஆலோசனை

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
Published on

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருகை தந்த பிரதமா் மோடியை லிண்டி கேமரூன் சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடி உடனான எனது சந்திப்பில், துயா்மிகுந்த விபத்து சம்பவத்துக்கு இரங்கலை பகிா்ந்து கொண்டோம். மீட்புக் குழுவினரின் இடைவிடாத பணிகளுக்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன். விபத்து தொடா்பான தகவல்களைத் திரட்ட இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் அகமதாபாத் நகர பொது மருத்துவமனையை லிண்டி கேமரூன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டவருக்கு உரிய ஆதரவளிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்திய வம்சாவளி பெண் மருத்துவா்: விமான விபத்தில் கனடா நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அவா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பல் சிகிச்சை பெண் மருத்துவா் நிராலி படேல் (32) என்பது தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com