
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் சிக்கி பலியானதால், அந்தந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் பலியானதால், பலியானவர்களின் நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் எப்போதும் உடனிருப்பதாகவும் கூறி, பிரிட்டன் வெளியுறவு செயலாளர், போர்ச்சுகல் வெளியுறவு அமைச்சர், கனடா வெளியுறவு அமைச்சரிடமும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், கீழிருந்து மேலே ஏறிய ஒரு நிமிடத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 2 விமானிகள், 12 விமான ஊழியர்கள், 169 இந்தியர்கள், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேரும் பலியாகினர்.
இருப்பினும், அதிருஷ்டவசமாக பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் மட்டும் உயிர்த் தப்பினார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.