விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல, 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பூமி சௌகானையும் சேர்த்து இருவர் என்று சொல்லலாம்.
plane crash photo from ani
விமான விபத்துani
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் போயிங் விமானம் 242 பயணிகளுடன் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாது. இதில், 241 பேரும் பலியாகினர். ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிலையில்தான், 10 நிமிடம் தாமதமாக வந்ததால், விமைன நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், விமானத்தை தவறவிட்டு நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் பூமி சௌகான் என்ற இளம்பெண்.

நுழைவுச் சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததால், என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அவரை உள்ளே அனுப்பினால், விமானம் புறப்படத் தாமதமாகும் என்று சொல்லிவிட்டார்கள். அகமதாபாத் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் என்னால் உரிய நேரத்துக்கு விமான நிலையம் வர முடியாமல் போனது. எவ்வளவோ கெஞ்சியும் பாதுகாவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் விமான நிலையத்திலேயே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தேன்.

ஆனால், விமானம் விபத்துக்குள்ளானதாகக் கேட்டபோது, என்னால் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நிமிடம் ஆடிப்போனேன் என்கிறார் பூமி.

அவர் விமான நிலையத்துக்குப்போகும்போது, அவளது குழந்தையை, தனது தாயிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இது பற்றி அவரது தாயார் கூறுகையில், அவள் குழந்தையால்தான் இன்று அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், எல்லாம் கடவுளின் செயல் என்றும், தனது மகள் உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறார்கள். ஆனால், நடந்திருப்பது மிகவும் துயரமான சம்பவம் என்றும் கூறியுள்ளார்.

இது பற்றி அவரது தந்தை கூறுகையில், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோதே, விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்கள். நாங்கள் அதிர்ந்துவிட்டோம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com