அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், அகமதாபாத் விமான நிலையத்தில் உயர்நிலை குழு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன், விமான அமைச்சக அதிகாரிகள், மீட்புப் படை அதிகாரிகள், மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.