airport
திருவனந்தபுரம் விமான நிலையம். கோப்புப்படம்.

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Published on

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது. விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் ஜெட் விமானம் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

விமானம், சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. "குறைந்த எரிபொருள் இருப்பதாகக் கூறி விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். எல்லாம் விரைவாகவும் தொழில் ரீதியாகவும் கையாளப்பட்டது," என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

விமானம் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்றவுடன் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com