
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது.
கேரளத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், காசா்கோடு, கண்ணூா் ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை இன்றும்(ஜூன் 15) நாளையும்(ஜூன் 16) விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் 24 மணிநேரத்தில் 200 மில்லி மீட்டருக்கும் மேல் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு இன்றும்(ஜூன் 15) பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும்(ஜூன் 16) திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையும்(ஜூன் 17) அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.