vijay rupani funeral
விஜய் ரூபானிDin

விஜய் ரூபானி உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஜய் ரூபானி உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு...
Published on

விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் காணப்பட்டது.

தற்போது அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜய் ரூபானியின் உடல், இன்னும் சற்றுநேரத்தில் அவரின் குடும்பத்தினரிடன் ஒப்படைக்க உள்ளனர்.

அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட்டுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு விஜய் ரூபானியின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

இதையடுத்து, அவரது சொந்த ஊரில் மாலை 5 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com