drones ban
ட்ரோன் பறக்கத் தடை

அமர்நாத் பாதைகளில்.. ட்ரோன்கள் பறக்கத் தடை!

அமர்நாத் யாத்திரை பாதைகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அமர்நாத் யாத்திரை செல்வதற்குப் பாரம்பரிய வழித்தடங்களான பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை என இரண்டு வழித்தடங்களில் மக்கள் பயணித்து குகைக்கோயிலை அடைகின்றனர்.

வருடாந்திர யாத்திரைக்கான பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமர்நாத் யாத்திரை வழித்தடங்களில் விமானத் தளங்கள் மற்றும் சாதனங்கள் பறப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவின்படி, ஜம்மு-காஷ்மீர் உள்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்,

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை ட்ரோன்கள், பலூன்கள் உள்ளிட்ட எந்த வகையான விமான தளங்கள் மற்றும் சாதனங்களும் பறப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவ காரணங்கள், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு போன்றவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. அத்தகைய விதிவிலக்குகளுக்கான விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

ஜூலை 3 முதல் திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரையைக் கருத்தில் கொண்டு, யாத்திரையை சுமுகமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அனைத்து பங்குதாரர்களும் விவாதித்து, கூடுதல் தளவாட ஏற்பாடுகளை முன்மொழிந்துள்ளனர்.

அதன்படி, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை ஸ்ரீ அமர்நாத் யாத்திரையின் முழு பாதையிலும் ஆளில்லாத விமானங்கள் பறக்கத் தடை அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரை நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com