சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர்!

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்.
Karnataka Deputy Chief Minister falls from bicycle
சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதல்வர் ANI
Published on
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய டி.கே. சிவக்குமார்,

“பள்ளி நாள்களில் நான் சாரணர் இயக்கத்தில் இருந்தேன், மரங்களை காப்பாற்றவும், தண்ணீரை சேமிக்கவும், நெகிழியைத் தடை செய்யவும் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க விரும்புகிறோம்.

பெங்களூர் பசுமை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு காலநிலை கிளப்பைத் தொடங்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முதல் அதைத் தொடங்குகிறோம்

மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், மழை வர வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி” எனத் தெரிவித்தார்.

இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே. சிவக்குமார் சைக்கிளில் திரும்பினார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அருகிலிருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவர் காயமடையவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com