இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியாகக் கருதப்படும் துடுப்பு மீன்கள் தமிழகம் உள்பட 4 இடங்களில் கரை ஒதுங்கியதால் அச்சம்
துடுப்பு மீன்கள்
துடுப்பு மீன்கள்
Published on
Updated on
1 min read

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறி என்ற நிலையில், கடந்த 20 நாள்களில் உலகின் நான்கு இடங்களில் கரைஒதுங்கியருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டூம்ஸ்டே என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த துடுப்பு மீன்கள் மிக நீளமாகவும் பட்டையாகவும் இருக்கின்றன. இவை ஆழ்கடல் வாழ் மீன்கள் என்பதால் இவற்றை கரையோரங்களில் பார்ப்பதே அரிது என்று கூறப்படுகிறது.

இது அண்மையில் தமிழகக் கடற்கரையில் மீனவர்களிடம் பிடிபட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே, இந்த மீன் பற்றிய நம்பிக்கையை அறிந்த மீனவர்களும் உள்ளூர் மக்களும் அச்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அரிய வகை துடுப்பு மீனை ஏழுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கையிலேந்தி வரும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்தான் இந்த மீனைப் பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக 11 மீட்டர் நீளமுள்ள இந்த மீன்கள், சதைப் பற்றுக் குறைவாக இருக்கும். நீள வாக்கில் பாம்புகள் போல கடலுக்கு அடியில் சென்றுகொண்டிருக்கும். இவை எப்போதாவது கரையோரம் தென்பட்டால், ஆழ்கடலில் ஏதேனும் பேரழிவு அல்லது இயற்கைப் பேரழிவு நேரிடும் என்று நம்பப்படுகிறது. இதனை எந்த அறிவியலும் உறுதி செய்யவில்லை என்றாலும், ஜப்பான் மக்களின் தீவிர நம்பிக்கையில் இதுவும் ஒன்றாக உள்ளது.அதாவது ஆழ்கடலில் இருப்பதால், கடலுக்கு அடியில் நிகழும் இயற்கை மாற்றங்களை இவை உணர்ந்துகொண்டு, எச்சரிக்கையாக கரையோரங்களுக்கு வருகின்றன. ஆனால், அதனை ஜப்பான் மக்கள், இயற்கைப் பேரழிவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே அவை கரைக்கு வருவதாக நம்புகிறார்கள்.

ஆனால், இவை உடல்நலம் இழக்கும்போதும், வயதாகும்போதும் கடலில் நீந்த முடியாமல்தான் கரை ஒதுங்குவதாகவும் அல்லது சில நேரங்களில் கடலில் ஏற்படும் மாற்றத்தால் மீன்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்குவது நேர்ந்தால், அப்போது இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com