
ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன்று கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரி நீரை பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானுக்கு திருப்பிவிடுவதற்கு 113 கி.மீ நீள கால்வாய் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா,
"இதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். முதலில் நமது தண்ணீரை நமக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். ஜம்முவில் வறட்சி சூழ்நிலை நிலவுகிறது. ஜம்முவில் வறட்சி இருக்கும்போது பஞ்சாபிற்கு ஏன் தண்ணீர் அனுப்ப வேண்டும்? சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் பஞ்சாப் ஏற்கெனவே தண்ணீர் பெற்று வருகிறது. நமக்குத் தேவைப்படும்போது அவர்கள் தண்ணீர் கொடுத்தார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் பிரதமர் மோடியின் வாக்குறுதி நிறைவேறுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.