
மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.
கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக் கொலை செய்த சோனம், தனது காதலன் ராஜ் குஷ்வாஹா பயன்படுத்திய செல்போன் எண்ணைத்தான், அவர் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் வர்மா என்ற கற்பனைப் பெயரில் செல்போனில் பதிவு செய்திருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
செல்போன் எண்களின் விவரங்களை அறியும் தனியார் செயலிகளிலும் இந்த எண் சஞ்சய் வர்மா என்று பதிவாகியிருந்ததால், காவல்துறையினருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த எண்ணை ராஜ் குஷ்வாஹா பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்
குஷ்வாஹா எண்ணை யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, சஞ்சய் என்று சோனம் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த எண்ணிலிருந்து, சோனம் செல்போன் எண்ணுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை அதாவது 39 நாள்களில் 234 முறை அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் குறைந்தது 30 முதல் 60 வினாடிகள் பேசப்பட்டுள்ளதும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சஞ்சய் வர்மா யார் எனத் தெரியாது!
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், சோனம் அடிக்கடி சஞ்சய் வர்மா என்ற நபருடன் பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், காவல்துறையினர், சோனம் சகோதரரை விசாரணைக்கு அழைத்தது.
அப்போது, அவரிடம் சஞ்சய் வர்மா யார் என்று கேட்டபோது அவரது சகோதரர் கோவிந்த் ரகுவன்ஷி, தனக்கு யார் என்று தெரியாது என பதிலளித்துள்ளார்.
இன்றுதான் முதன் முதலில் அந்தப் பெயரைக் கேள்விப்படுகிறேன், அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கும்கூட கோவிந்த் ஒப்புக்கொண்டிருந்தார். எனக்கு என்னென்ன உண்மைகள் தெரியுமோ அது அனைத்தையும் காவல்துறையிடம் சொல்லிவிட்டேன். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயார் என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
மேலும், சோனம் கையில் 10000 முதல் 20000 வரை வைத்திருந்தார். எப்போதுமே இரண்டு செல்போன்கள் பயன்படுத்துவார். ஒன்று அலுவலகத்துக்கு என்று சொல்லுவார் என்று தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்?
உண்மையில் வெறும் முக்கோணக் காதல் மட்டுமே இந்தக் கொலைக்குப் பின்னணியாக இருக்காது என்று கருதும் காவல்துறை, சோனம் மற்றும் ராஜாவின் குடும்பத்தாரிடம், தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ராஜா - சோனம் திருமணம் மே 11ஆம் தேதி நடந்துள்ளது. இவர்கள் மேகாலயத்துக்கு மே 20ல் சென்றுள்ளனர். மே 23ஆம் தேதி கொலை நடந்துள்ளது. 10 நாள்களுக்குப் பின் ராஜா உடல் மீட்கப்பட்டது. ஜூன் 8ஆம் தேதி சோனம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.