அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் அகற்றும் பணி தொடக்கம்

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் சிதைந்த பாகங்களை அப்பறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Air India plane crash
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.
Published on
Updated on
1 min read

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் சிதைந்த பாகங்களை அப்பறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, மீதமுள்ள 241 பேர் உள்பட 270 பேர் பலியாகினர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் சிதைந்த பாகங்களை விபத்து நடந்த இடத்திலிருந்து அப்பறப்படுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஜெய்பால்சிங் ரத்தோர் கூறுகையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பாகங்களை இன்று முதல் விமான நிலைய வளாகத்தில் உள்ள குஜராத் மாநில விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவன கட்டடத்திற்கு நகர்த்தத் தொடங்கியுள்ளோம்.

முழு உடைந்த பாகங்கைளையும் மாற்ற 48 முதல் 72 மணிநேரம் ஆகும். விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்த விமானத்தின் பாகங்கள் இருக்கும் என்று தெரிவித்தார்.

பெண் விமானியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com