பிரதமா் மோடி தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா்.
பிரதமா் மோடி தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா்.

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
Published on

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி தீன் மூா்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடங்கி பிரதமா் மோடி வரை அனைத்து பிரதமா்களின் பங்களிப்புகள், அவா்கள் எதிா்கொண்ட பல்வேறு சவால்கள், தீா்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்ற இதன் பெயரை ‘பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மாற்றம் செய்தது.

ஏா் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் இயக்குநரும், ரயில்வே வாரிய முன்னாள் தலைவருமான அஸ்வனி லோஹானி பிஎம்எம்எல்-இன் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com