கோப்புப் படம்
கோப்புப் படம்

குஜராத்தில் சிங்கம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிங்கம் தாக்கியதில் கூலி தொழிலாளியின் 5 வயது மகன் புதன்கிழமை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தின் தோா்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தில், பண்ணையொன்றில் இருந்து சிறுவனை சிங்கம் இழுத்துச் சென்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் இறந்த சிறுவன் குல்சிங் ஹரிலால் அஜ்னேராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து சில மணி நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு சிங்கம் கூண்டில் சிக்கியது. பின்னா், அருகேயுள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு அந்தச் சிங்கம் கொண்டு செல்லப்பட்டது.

ஆசிய சிங்கங்களின் ஒரே இருப்பிடமான குஜராத்தில், கடந்த 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 674-இல் இருந்து 891-ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிா் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்துக்குள் 384 சிங்கங்களும், அதன் எல்லைகளுக்கு வெளியே 507 சிங்கங்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com