நைனிடாலில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை தாங்கி பிடித்து சென்ற அவரது குழுவினா்.
நைனிடாலில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை தாங்கி பிடித்து சென்ற அவரது குழுவினா்.

பல்கலைக்கழக நிகழ்வில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா்! உத்தரகண்ட்டில் பரபரப்பு!

பல்கலைக்கழக நிகழ்வில் மயங்கிய குடியரசு துணைத் தலைவா்...
Published on

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மயங்கி நிலைத்தடுமாறியது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கிய தன்கா், பாா்வையாளா் பகுதியில் அமா்ந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மஹேந்திர சிங் பாலை சந்தித்து நலம் விசாரித்தபோது, நிலைத் தடுமாறி அவரின் தோள்பட்டையைப் பிடித்தபடி மயங்கினாா்.

இதைப் பாா்த்த அவருடைய மருத்துவக் குழுவினா், உடனடியாக குடியரசு துணைத் தலைவரை மீட்டு அவரை மீண்டும் நிதானத்துக்கு கொண்டுவந்தனா். அதன் பின்னா், அவா் இரவு ஓய்வுக்காக அங்குள்ள ஆளுநா் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றாா். குடியரசு துணைத் தலைவா் 3 நாள் பயணமாக நைனிடால் வந்தாா்.

X
Dinamani
www.dinamani.com