
சிறுவாணி அணைப் பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்து உள்ளது.
கேரளம் வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையிலிருந்து கோவைக்குத் தேவையான குடிநீர் தரப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை துவக்கமே நன்றாக இருந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் 43 அடியாக இருந்தபோது பாதுகாப்பு காரணங்கள் கூறி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அவ்வாறு செய்யாமல் ஒப்பந்தப்படி 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் அணைப் பகுதியில் மழை இல்லை, குடிநீர்த் தேவைக்காக அதிகளவில் எடுக்கப்பட்டதால் நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. நேற்று முன்தினம் 39.79 அடியாகக் குறைந்து இருந்தது. தற்போது அணைப் பகுதியில் மழைப்பொழிவு மீண்டும் துவங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைப் பகுதியில் 48 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 60 மில்லி மீட்டர் பதிவானது. அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்துள்ளது.
குடிநீர்த் தேவைக்காக 94.09 எம்.எல்.டி தரப்பட்டது. வானிலை ஆய்வு மையம் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு பாலக்காடு, கணுவாய் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கேரளம், கர்நாடகம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என அறிவுறுத்தியுள்ளது. உள்ளது. கனமழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவான 44.61 வரை அணையில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.