அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
Kamakhya temple
காமாக்யா கோயில்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.

51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா தேவி திருக்கோயில். அன்னையின் உடற்கூறுகளில் தலைப்பாகம் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம் என்றழைக்கப்படுகிறது.

இத்திருத்தலத்தில் அம்புபாச்சி மேளா என்பது அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலைத்தைக்கடக்கிற மூன்று நாள்களும் கோயிலின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலம் முடிவடைந்த பிறகு கோயில் முழுவதும் தூய்மைப்படுத்துவதற்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

அதன்படி, வருடாந்திர அம்புபாச்சி மேளா ஜூன் 22 (ஞாயிறு) அன்று விரிவான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.. காமக்யா கோயில் நடை மூடப்பட்டன. சம்பிரதாய பூஜைகளுக்குப் பிறகு இன்று கோயில் நடை திறக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் எக்ஸ் தளப் பதிவில்,

அம்புபாச்சி மேளா நிறைவடைந்ததையொட்டி காமாக்யா கோயிலின் நடை இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. பாரதத்தின் நலனுக்காக காமாக்யாவை நான் பிரார்த்திக்கிறேன். காமாக்யா தேவி அனைவருக்கும் அருள்புரிந்து வழிநடத்தட்டும்.

கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காமக்யா தேவியை தரிசித்து அருள்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஜெய் காமாக்யா என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் அம்புபாச்சி மேளா நிகழ்வு கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது, இது மாநிலத்தின் முக்கிய சுற்றுலா நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அம்புபாச்சி மேளாவின்போது, ​​காமாக்யா கோயிலில் விஐபி மற்றும் விவிஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தங்குவதற்கு வசதியாக பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேளா சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

காவல்துறையினருக்கும் தனி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவர்கள் வசதியுடன் மருத்துவ முகாம்களும், பிரம்மபுத்திரா நதியைக் கடக்க போதுமான படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கோயிலைச் சுற்றி காவல்துறையினரைத் தவிர, தன்னார்வலர்கள், தனியார் பாதுகாப்புக் காவலர்கள் உள்பட மேளா நடைபெறும் இடத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SUMMARY

The doors of Kamakhya temple atop Nilachal hill were opened to devotees on Thursday after four days of 'Ambubachi Mela'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com