சிபு சோரனிடம் நலம் விசாரித்த குடியரசுத் தலைவா்

சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
President Murmu visits Shibu Soren
ஹேமந்த் சோரனிடம் தந்தையின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முர்மு
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வயது மூப்பால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனை அவர் சந்தித்து, அவரது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் புகைப்படமும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சர் கங்கா ராம் புற்றுநோய் மையத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

இந்த வருகையின் போது, ​​மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது அதிநவீன வசதிகளை முர்மு பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகளுடன் உரையாடினார் என்று முர்முவின் அலுவலகம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SUMMARY

President Draupadi Murmu personally met former Jharkhand Chief Minister and Jharkhand Mukti Morcha party leader Shibu Soren and inquired about his well-being.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com