குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

விண்வெளியிலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உரையாற்றியது பற்றி...
Subhanshu Shukla from space
விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா படம்: X/Axiom Space
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்.

அவருடன் 3 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு அவர்கள் சென்ற விண்கலன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையவுள்ள நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு உரையாற்றியுள்ளனர்.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, விண்ணிலிருந்து அனைவருக்கும் வணக்கத்தை (நமஸ்காரம்) தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

”அற்புதமான பயணமாக இருக்கிறது. இங்குள்ள பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்குப் பழகிக் கொண்டிருக்கிறேம். ஒரு குழந்தையைப் போல நடப்பதற்கு, நகர்வதற்கு போன்றவையைக் கற்றுக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசித்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், பூமியில் இருந்து 418 கி.மீ. தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கும் விண்கலனின் கண்ணாடி வழியாக பூமியைக் காட்டினார்.

முன்னதாக பூமியில் இருந்து புறப்பட்ட 10 நிமிடங்களில் பேசிய சுபான்ஷு சுக்லா, ”இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கமும் கூட” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Summary

Indian astronaut Subhanshu Shukla, who is on a trip to the International Space Station, spoke from the Dragon spacecraft.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com