கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.
Adulterated diesel stalls 19 vehicles in MP CM Mohan Yadav’s convoy
நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்
Published on
Updated on
1 min read

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற்றும் டீசல் காரணமாக பழுதடைந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்த வாகனங்கள் பழுதடைந்ததைத் தொடர்ந்து, இந்தூரிலிருந்து புதிய வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கலப்பட எரிபொருளை விற்பனை செய்த ரத்லமில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது கூடுதல் ஆட்சியர் ஷாலினி ஸ்ரீவஸ்தவா, வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் ரத்லமில் உள்ள பெட்ரோல் நிலையத்தை வாகனங்கள் அடைந்தன.

எரிபொருள் நிரப்பிய சிறிது நேரத்திலேயே, அனைத்து வாகனங்களும் சிறிது தூரம் சென்ற பிறகு நின்றுவிட்டன. அவற்றைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்த வேண்டியிருந்தன.

புகார் வந்தவுடன், அந்த பெட்ரோல் நிலையத்திலிருந்து எரிபொருள் மாதிரி சேகரிக்கப்பட்டு, நிறுவனம் உடனடியாக சீல் வைக்கப்பட்டது.

இந்த வாகனங்களைச் சோதனை செய்தபோது, ​​எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டறிந்ததாக பாதுகாப்பு வாகனங்களின் சில ஓட்டுனர்கள் கூறினர்.

SUMMARY

A petrol pump in Madhya Pradesh’s Ratlam district has been sealed after adulterated diesel from the outlet allegedly caused the breakdown of 19 vehicles in Chief Minister Dr Mohan Yadav’s convoy on Thursday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com