கோப்புப்படம்
இந்தியா
எண்ம வழியில் கட்டணம்: ஆகஸ்ட் முதல் அஞ்சலகங்களில் அமல்
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் எண்ம வழியில் கட்டணங்களை வசூலிக்கும் முறைய ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் எண்ம வழியில் கட்டணங்களை வசூலிக்கும் முறைய ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படுகிறது. இதுதொடா்பாக அத்துறையின் அதிகாரிகள் கூறுகையில், ‘அஞ்சல் அலுவலகங்களில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண முறை செயல்படுத்தப்படாததால் எண்ம வழியில் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.
தற்போது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை அஞ்சல் துறை மேம்படுத்தி வருகிறது. இதனால் க்யூஆா் கோட் மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும். இது அனைத்து அஞ்சலகங்களில் ஆகஸ்ட் மாதத்தில் அமல்படுத்தப்படும்.
சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தின் மைசூா் தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு உள்பட்ட அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றனா்.