
ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செயலியில் நேரலையில் ஆபாசப் படத்தில் நடித்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தங்களின் மகள்களின் கல்விச் செலவுக்காக இவ்வாறான காரியத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
நன்றாகப் படிக்கும் இரு மகள்களில் ஒருவர் பி.இ. டெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் என்றும், மற்றொருவர் 470-க்கு 468 மதிப்பெண்கள் பெற்று, தற்போது கல்லூரி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, மகள்களின் கல்விச் செலவு குறித்த கவலைக்கு ஆளாகினார்.
இதனையடுத்து, மனைவியுடன் சேர்ந்து மொபைல் செயலியில் நேரலையில் ஆபாசப் படத்தில் நடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில்தான், ஆட்டோ ஓட்டுநரையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விடியோவுக்காக பயன்படுத்தப்பட்ட எச்டி கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.