அரசியலமைப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை!

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை..
ராகுல் காந்தி - ஜெய்சங்கர்
ராகுல் காந்தி - ஜெய்சங்கர்
Published on
Updated on
1 min read

அரசியலமைப்பு புத்தகத்தைக் கையில் எடுப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,

அரசியலமைப்பு சட்டம் பற்றிப் பேசுபவர்கள் அதன் உணர்வைக் காக்க தவறிவிட்டனர். எமர்ஜென்சிக்கு மன்னிப்பு கேட்கத் தவறியவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பின் நகலைக் கையில் எடுத்துச் சுற்றித் திரிவதால் எந்தப் பயனும் இல்லை. அரசியலமைப்பை இதயத்திலிருந்து மதிக்க வேண்டும்.

எமர்ஜென்சியின் போது அரசியலமைப்பு ஐந்து முறை திருத்தப்பட்டது. அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி குடும்பத்தினர் இன்று வரை எந்தவித வருத்தமும் தெரிவித்ததில்லை. அவசரநிலை நாட்டின் உணர்வை உடைக்கும் இருண்ட முயற்சி. அவசரநிலை நமக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம் என்றால், ஒருபோதும் சுதந்திரத்தை அற்பமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான்.

அவசரநிலையை இந்திய ஜனநாயக வரலாற்றில் "இருண்ட அத்தியாயம்" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார் என்று அவர் தெரிவித்தார்.

SUMMARY

Union External Affairs Minister S Jaishankar indirectly criticized Congress MP Rahul Gandhi, saying that there is no point in picking up the Constitution book. He should learn to respect it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com