திகாவில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் 3 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

திகாவில் உள்ள புதிய ஜெகந்நாதர் கோயிலுக்கு 3 லட்சம் பக்தர்கள் வருகை..
3 lakh visit Jagannath temple in Digha
திகா ஜெகந்நாதர் கோயில்
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தின் திகாவில் உள்ள புதிய ஜெகந்நாதர் கோயிலுக்கு 3 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக இஸ்கான் மூத்த துறவி ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கடலோர நகரமான திகாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயிலில் முதலாவது ரத யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கிவைத்தார்.

தேர் தேர்திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் கோயிலுக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக சர்வதேச கிருஷ்ண பக்தி சங்கத்தின் (இஸ்கான்) துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

திகா கோயிலில் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய கடவுள்களின் சடங்களுன் மற்றும் பூஜைகளைச் செய்யும் பணி இஸ்கான் நிறுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேச்ரோச்வத்தின் இரண்டு நாள்களில் மொத்தம் மூன்று லட்சம் பக்தர்கள் கோயிலுக்குவருகை தந்தனர். திகாவின் கடலோர மாவட்டங்களில் அவ்வவ்போது மழை பெய்தாலும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சீராக உள்ளதாக இஸ்கான் துறவி தெரிவித்தார்.

பிரதான சன்னதியிலிருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கோயிலில் தற்போது ரதங்கள் நிறுத்தப்பட்டுள்ள தெய்வங்களுக்கு முன்பான அனைத்து சடங்குகளும் செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 30 அன்று ஜெகந்நாதர் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 33 லட்சம் பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

திகா சங்கர்பூர் மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலோர மாவட்டத்தில் உள்ள திகா மேற்கு வங்காளத்தில் ஒரு மத சுற்றுலா மையமாகவும் மாறியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

SUMMARY

An estimated three lakh devotees visited the new Jagannath temple in Digha on the day of Rath Yatra and the preceding day, a senior ISKCON monk said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com