காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
ropeways to Kamakhya Temple
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வருகை தந்தார். மக்களின் பயணத்தை எளிதக்கக்கூடிய மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கவும், நேரத்தைச் சிக்கனமாக்கவும் ரயில் நிலையத்திலிருந்து காமாக்யா கோயிலுக்கும், சோனாராமிலிருந்து காமாக்யா கோயிலுக்கும் ரோப் வே (ரோப் கார்) வசதி விரைவில் தொடங்கப்படும்.

இரண்டு ரோப் வேக்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. டெண்டர் செயல்முறை ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. பல ரோப் வே வசதிக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

காமாக்யா கோயிலுக்கு இரண்டு ரோப்வேக்களின் கட்டுமானமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விரைவான போக்குவரத்து முறையை எளிதாக்கவும், பயண நேரத்தைக் குறையுக்கவும் இது பயன்படும். சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, இதன்மூலம் பொருளாதாரமும் உயரும் என்று அவர் கூறினார்.

காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் அம்புபாச்சி மேளா ஜூன் 22 தொடங்கி 26ல் நிறைவடைந்தது. தேவியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடி வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்ததால் மேளா நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து காமாக்யா தேவியை தரிசிக்க வந்துள்ளேன்.

குடும்பத்தோடு கோயிலுக்கு வருகை தந்திருந்த முதல்வர் அஸ்ஸாம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

அம்புபாச்சி விழாவை ஏற்பாடு செய்ததற்காகக் கோயில் நிர்வாகக் குழு, சுற்றுலாத் துறை, அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

SUMMARY

Assam CM Sarma announces construction of two ropeways to Kamakhya Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com