
விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விவசாயிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்(PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிஐபி, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது.
விவசாயிகளிடையே இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The central government has said that water usage in farming are being taxed is not true.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.