' ரா' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்திய 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
IPS officer Parag Jain to take charge as next RAW chief on July 1
பராக் ஜெயின் Photo credit: IANS
Published on
Updated on
1 min read

இந்திய 'ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது தலைவராக உள்ள ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுளள்து. இதனையடுத்து அந்த பதவிக்கு புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பராக் ஜெயின் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவியேற்கும் நாளிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (IPS) அதிகாரியான பராக் ஜெயினுக்கு, உளவுத் துறை பிரிவுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உண்டு.

தற்போது ஏவியேஷன் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ள அவர், ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடலிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். ரா என்பது இந்திய அரசின் முக்கிய வெளிநாட்டு உளவுத் துறை அமைப்பாகும்.

Summary

Neighbourhood specialist, spy craft master Parag Jain appointed new RAW chief

பரந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com