ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலி

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.
pipeline excavation work in Rajasthan
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

பன்னிரண்டு தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கினர். அலறல் சத்தம் கேட்டதும், மற்ற தொழிலாளர்கள் மற்றும் திட்ட ஊழியர்கள் மீட்பு முயற்சிகளைத் தொடங்கினர். ஆனால் மண்ணின் ஆழம் மற்றும் கனத்தன்மை உடனடி மீட்பு முயற்சிகளை கடினமாக்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்தன. மீட்புக் குழுக்கள் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை அகற்றி சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ஆறு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் நான்கு பேர் பலியாகினர். மேலும் இருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஐந்து பேர் இன்னும் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணி நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டனர். ஜங்கி கா நக்லா கிராமத்திற்கு அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

According to officials, some labourers were filling a 10-foot-deep trench dug to lay a pipeline, when the soil caved in. A total of twelve workers got trapped under the soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com