உத்தரகாசியில் மேக வெடிப்பு: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள்.
cloudburst in Uttarkashi
உத்தரகாசியில் மேக வெடிப்பு நிகழ்ந்த இடம்.
Published on
Updated on
1 min read

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள்.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை மற்றும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானதாக பேரிடர் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. யமுனோத்ரி நெடுஞ்சாலையில் மேக வெடிப்பு பற்றிய தகவல் நள்ளிரவில் கிடைத்ததாக பர்கோட் காவல் நிலைய பொறுப்பாளர் தீபக் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு கூடாரம் அமைத்து வசித்து வந்ததைக் அவர்கள் கண்டறிந்தனர். கனமழையால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை எட்டு முதல் ஒன்பது பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள குத்னூர் கிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் ஓஜ்ரி அருகே உள்ள சாலையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. விவசாய நிலங்கள் குப்பைகளால் நிரம்பியுள்ளன. சயனசட்டியில் உள்ள குப்தா குன்ஷாலா திரிகிலி மோட்டார் பாலமும் ஆபத்தில் உள்ளது. கனமழையைத் தொடர்ந்து யமுனையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

Summary

The labourers went missing following heavy rainfall and cloudburst near Silai Bend in Barkot area on way to the Yamunotri temple in Uttarkashi district.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com