தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கம்

ஜப்பானிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு...
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ - 357’ ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

அந்த விமானத்துக்குள் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த விமானத்திலிருந்த பயணிகள் மாற்று வழிகளில் தில்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Air India flight diverted to Kolkata due to 'persistent warm cabin temperature'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com