உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்! நீரஜ் சோப்ரா ஓராண்டு வெற்றி!

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடம்
நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)
நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)X | Neeraj Chopra
Published on
Updated on
1 min read

ஈட்டி எறிதல் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பெற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின்போது, ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ராவின் முதலிடத்தை கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தட்டிப் பறித்தார்.

இருந்தபோதிலும், அதனைத் தொடர்ந்து பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை நீரஜ் சோப்ரா பதிவு செய்தார். டைமண்ட் லீக் போட்டியில் (தோஹா) இரண்டாமிடம் (90.23 மீ), ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டியில் (போலந்து) வெள்ளிப் பதக்கம், பாரிஸ் டைமண்ட் லீக் போட்டி, ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி என அனைத்திலும் சிறப்பான வெற்றிகளைக் கொடுத்தார்.

இதன் பலனாக, ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் அவருக்கு 1445 புள்ளிகள் கிடைத்தன. ஓராண்டுக்குப் பின்னர், மீண்டும் இந்திய வீரர் முதலிடத்துக்கு சென்றுள்ளார்.

ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வருகிறார்.

இந்த நிலையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் ஈட்டி எறிதலில் இந்தியாவை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார், நீரஜ் சோப்ரா.

அவருக்கு அடுத்ததாக 1431 புள்ளிகளுடன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், மூன்றாம் இடத்தில் 1407 புள்ளிகளுடன் ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர், நான்காம் இடத்தில் 1370 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் (நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்) அர்ஷத் நதீம் உள்ளனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com