புதுப்பொலிவுடன் பஹல்காம்! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைகிறது: சுற்றுலா பயணிகள் வருகையால் புதுப்பொலிவு!
பஹல்காமில் சுற்றுலா பயணிகள்
பஹல்காமில் சுற்றுலா பயணிகள்ANI
Published on
Updated on
1 min read

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூா் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனா்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது.

பயங்கரவாத தாக்குதலுக்குப்பின், பாதுகாப்பு காரணங்களுக்காக பஹல்காமுக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டினர். அங்குள்ள தங்கும் விடுதிகளில் விடுமுறையைக் கொண்டாட முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் அவற்றை ரத்து செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் ஆள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து பஹல்காம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தநிலையில், இப்போது அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டதை மத்திய அரசும் மாநில அரசும் உறுதி செய்திருந்தன. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் பஹல்காமுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளையொட்டி பயணிகள் கூட்டம் அதிலும் குறிப்பாக, இளம் பருவப் பெண்கள் கூட்டம் பஹல்காமில் அதிகரித்து காணப்பட்டது.

Summary

Pahalgam gets a makeover! Tourists increase

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com