புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புரி ரத யாத்திரை கூட்ட நெரிசல்
புரி ரத யாத்திரை கூட்ட நெரிசல்PTI
Published on
Updated on
1 min read

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோசமான நிர்வாக நடவடிக்கைகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசு மீது விமர்சனம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும். ரத யாத்திரையையொட்டி முக்கிய விஐபிக்கள் பலர் கலந்துகொள்வதால், மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Summary

Rath Yatra stampede Odisha CM announces Rs 25 lakh assistance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com